போக்சோவில் தொழிலாளி கைது


போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 16 May 2021 8:47 PM IST (Updated: 16 May 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. 

இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். 

Next Story