தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2021 8:47 PM IST (Updated: 16 May 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி தென்பாகம், முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம், சேரகுளம், ஏரல், குளத்தூர், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 84 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story