தூத்துக்குடியில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய 850 பேருக்கு அபராதம்
தூத்துக்குடியில் கொரோனா முழு ஊரடங்கின் போது விதிகளை மீறிய 850 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது
தூத்துக்குடி:
கொரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போலீஸ் துறை சார்பில் தினமும் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய 814 பேரிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 36 பேருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story