கோத்தகிரி ஹேப்பிவேலியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
கோத்தகிரி ஹேப்பிவேலியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி ஹேப்பிவேலியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரிடர் மீட்பு உதவிக்குழு அமைத்து அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர், முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுத்தல், தன்னார்வ அமைப்பினரிடம் இருந்து மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி கொடுத்தல் உள்ளிட் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த இளைஞர்கள் ஹேப்பிவேலியில் வீடு, வீடாக சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். அவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story