கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு


கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 16 May 2021 9:23 PM IST (Updated: 16 May 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே தொடர் மழையால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கம்பம்:
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக தேனி உள்பட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஓடை, கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் கம்பம் முல்லைப்பெரியாற்றில் சேர்ந்தது. 
இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. இதற்கிடையே மழை பெய்து ஓடை, கால்வாய்களில் தண்ணீர் அதிக அளவு வந்ததால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
இதனால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து ஆற்றில் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். கோடை காலத்தில் பெய்த தொடர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story