உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 300 பேர் மீது வழக்கு


உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 300 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 May 2021 9:37 PM IST (Updated: 16 May 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உத்தமபாளையம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி பலரும் வாகனங்களில் சுற்றி திரிந்தனர். அவ்வாறு திரியும் நபர்களை பிடிக்கும் வகையில் உத்தமபாளையம் போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 300 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். 
மேலும் ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு நூதன முறையில் தண்டனை அளிக்கும் வகையில் அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர். அதன்படி, அவர்கள் இனிமேல் ஊரடங்கு உத்தரவை மதிப்பேன். அதனை மீறி வெளியே சுற்ற மாட்டேன். போலீசார் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story