கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 3 பேர் பலி
கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 163 பேர் பெண்கள் ஆவர். இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்து 891 ஆனது. அதேநேரம் 443 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 342 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே பள்ளப்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர், தாடிக்கொம்புவை சேர்ந்த 62 வயது முதியவர், நாயக்கர் புதுதெருவை சேர்ந்த 50 வயது பெண் என 3 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story