சுற்றித்திரிந்த 155 பேர் கைது


சுற்றித்திரிந்த 155 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2021 10:06 PM IST (Updated: 16 May 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

முழு ஊரடங்கையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவை இல்லாமல் சுற்றி திரிந்த 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி சிவகங்கை போலீஸ் சப்-டிவிசனில் 44 இருசக்கர வாகனங்களும், காரைக்குடி சப்-டிவிசனில் ஒரு கார் மற்றும் 44 இருசக்கர வாகனங்களும், திருப்பத்தூர் சப்-டிவிசனில் 14 இருசக்கர வாகனங்களும், தேவகோட்டை சப்-டிவிசனில் 35 இருசக்கர வாகனங்களும், மானாமதுரை சப்-டிவிசனில் 2 ஆட்டோ மற்றும் 25 இருசக்கர வாகனங்களும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story