போலீசார் அதிரடி வாகன சோதனை
முழுஊரடங்கு உத்தரவு எதிரொலியாக ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
முழுஊரடங்கு உத்தரவு எதிரொலியாக ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவ செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ராமநாதபரம் நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.
இவ்வாறு செல்போனில் பேசிக்கொண்டு கவனக்குறைவாக சென்ற 4 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமலும், பின்னால் அமர்ந்து கொண்டும் வாகனங்களில் சென்ற 227 பேர் மீதும், இதர பிரிவுகளின் படி 114 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அபராதம்
ராமநாதபுரம் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாமல் சென்றதாக 21 பேர் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அனைத்து முக்கிய சாலைகளையும் இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்தனர்.
Related Tags :
Next Story