திருச்சியில் இருந்து செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
திருச்சியில் இருந்து செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் ரெயில் பயணிகள் பலர் முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்தனர். இதனால் மிக குறைவான பயணிகளை கொண்டு ரெயில் சேவையை இயங்கி வந்தது. இதுவரை திருச்சி வழியாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06796) சிறப்பு ரெயிலும், இதுபோல மறு மார்க்கத்தில் சென்னை-திருச்சி ரெயிலும், (வண்டி எண்: 06795), கோவையில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06608) சிறப்பு ரெயில் மற்றும் சென்னையில் இருந்து மன்னார்குடி வரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06179) மறு மார்க்கத்தில் இயங்கும் மன்னார்குடி- சென்னை ரெயில் (வண்டி எண்: 06180). இந்த ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story