காளையார்கோவில்,
காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் மற்றும் போலீசார் அடங்கிய குழு முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது பரமக்குடி சாலையில் முழு ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றும் நபர்களை பிடித்து விசாரித்து அபராதம் விதித்தும் ஒரு சிலரை எச்சரிக்கை விடுத்தும் தாசில்தார் அனுப்பி வைத்தார். கொரோனா பரவல் அதிகமாகி உள்ள காலக்கட்டத்தில் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.