குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி


குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 16 May 2021 10:39 PM IST (Updated: 16 May 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

க.பரமத்தி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மேற்பார்வையில் க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சூர், புன்னம் ஊராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ரேஷன்கடை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story