1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதி


1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 16 May 2021 10:46 PM IST (Updated: 16 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் 1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

மானாமதுரை,

மானாமதுரையில் 1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

1,321 பேருக்கு...

மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள 7-வது வார்டை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, மானாமதுரை நகர செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிகருப்பன் 1,321 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

 நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராஜமணி, அண்ணாத்துரை, யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை, துணை சேர்மன் முத்துச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், இடைகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி ஜெயமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி காசி சிவராமன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேங்கை சுந்தர், ஓன்றிய மாணவரணி கார்த்திக், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் சின்னைமாரியப்பன், தாசில்தார், மாணிக்கவாசகம், வட்டவழங்கல் அதிகாரி மருதுபாண்டி, தாலுகா அலுவலர் கலைவாணி, ரேஷன் கடைபணியாளர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்புவனம்

திருப்புவனத்தில் உள்ள உழவர் பணி கூட்டுறவு சங்கம் சார்பில் கொரோனா முதற்கட்ட நிவாரண உதவி வழங்கும் விழா தேரடி வீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கொரோனா முதல்கட்ட நிவாரண உதவி ரூ.2 ஆயிரத்தை வழங்கி பேசினார்.
 விழாவில் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தமிழரசி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் அழகர்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story