மாவட்ட செய்திகள்

மத்தூர் அருகே கொரோனாவால் இறந்ததாக கருதிபெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு + "||" + woman died in suspect of corona

மத்தூர் அருகே கொரோனாவால் இறந்ததாக கருதிபெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

மத்தூர் அருகே கொரோனாவால் இறந்ததாக கருதிபெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
மத்தூர் அருகே கொரோனாவால் இறந்ததாக கருதி பெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்கள் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்சில் கவுண்டனூர் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.  இந்தநிலையில் லட்சுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும், அதனால் அவரது உடலை கிராமத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பித்தும் அதனை அப்பகுதி பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை என்று ெதரிகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு குறித்து அறிந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பெண்ணின் உடலை பெனுகொண்டாபுரம் ஏரிக்கரையில் வைத்து விட்டு சென்று விட்டனர். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மத்தூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் ஏரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் தீர்வு எட்டப்பட்டு பெண் உடல் ஏரியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஏரிக்கரையோரம் இறந்த பெண்ணின் உடல் சுமார் 1 மணி நேரம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
========

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்
கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ கிராம மக்கள் ரூ.20 லட்சம் திரட்டினர். அதே சமயம் மொத்த செலவையும் ஆந்திர அரசு ஏற்றது.
2. கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியிடம் தாலிசங்கிலி திருட்டு மரித்து போன மனிதநேயம்
ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயின் திருடப்பட்டது.
4. கொரோனாவால் மரித்துப்போன மனிதாபிமானம்: பெற்ற தாயை வீட்டுக்குள் விட மறுத்த மகள்
கொரோனாவால் மனிதாபிமானம் மரித்து போய்விட்டது என சொல்லும் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயையே வீட்டுக்குள் விட மகள் மறுத்த சம்பவம் நடந்து உள்ளது.
5. மத்தியபிரதேசத்தில் துயர சம்பவம் கொரோனாவால் கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை
மத்தியபிரதேசத்தில் துயர சம்பவம் கொரோனாவால் கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் இருந்து குதித்தார்.