2 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு


2 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 11:56 PM IST (Updated: 16 May 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

பெலகாவி ஹிண்டல்கா மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

பெலகாவி:

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறையில் கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி கிடையாது. சிறை வார்டன்கள், மற்ற போலீசாருக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் பெலகாவி ஹிண்டல்கா சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், 2 கைதிகளும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story