நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை


நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2021 6:28 PM GMT (Updated: 16 May 2021 6:28 PM GMT)

நெல் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பிலியபுரம், 
உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. கொல்லிமலை அய்யாற்று நீரை நீராதாரமாக கொண்ட இப்பகுதி, ஆண்டுக்கு 3 அறுவடைகளை கொண்டுள்ளது. சம்பா பருவத்திற்கு பின், முதல் குறுவையில் ஏடிடி-43, ஏடிடி-45, ஏஎஸ்டி-16, கோ-51 ஆகிய சன்ன ரக நெல்வகைகளையும், மற்றும் குண்டு ரக நெல் வகைகளையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பி.மேட்டூர், வைரிசெட்டிப்பாளையம், எரகுடி, பச்சபெருமாள்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. வியாபாரிகளின் நெல் கொள் முதலில் நியாயமான விலை கிடைக்காது என கருதும் விவசாயிகள், அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாயிகளின் நலன் கருதி சரியான தருணத்தில் நெல்கொள்முதல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story