மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு சாவு + "||" + 4 people in the same family die to corona

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு சாவு

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு சாவு
பாகல்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு பலியான பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு:

பாகல்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு பலியான பரிதாபம் நடந்துள்ளது.

பள்ளி ஆசிரியை

பாகல்கோட்டை மாவட்டம் தேவிநாலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ஒன்டிகோடி (வயது 46). இவரது மனைவி ராஜேஸ்வரி (44). இவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகன் உள்ளான். 

இந்த நிலையில், வெங்கடேசுக்கும், அவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ராஜேஸ்வரியின் தந்தை ராமனகவுடா (72), இவருடைய மனைவி லட்சுமிபாய் (68) ஆகிய 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் வயதான தம்பதிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. அதாவது மகள் ராஜேஸ்வரியுடன் 2 பேரும் தொடர்பில் இருந்ததால், அவர்களுக்கும் தொற்று பரவி இருந்தது.

4 பேர் சாவு

அதைத்தொடர்ந்து, 4 பேரும் பாகல்கோட்டை டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி 4 பேரும் அடுத்தடுத்து உயிர் இழந்து விட்டார்கள். அதாவது ஒரு வார இடைவெளியில் வெங்கடேஷ், ராஜேஸ்வரி, ராமனகவுடா, லட்சுமிபாய் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருந்தனர்.

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியானதால், வெங்கடேஷ், ராஜேஸ்வரி தம்பதியின் 15 வயது மகன் பெற்றோர், தாத்தா, பாட்டி என யாருமே இல்லாமல் அனாதையாகி உள்ளேன். இந்த சம்பவம் தேவிநாலா கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.