ரேஷன் கடைகளில் 2-வது நாளாக கொரோனா நிவாரண நிதி- நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற பொதுமக்கள்


ரேஷன் கடைகளில் 2-வது நாளாக கொரோனா நிவாரண நிதி- நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 May 2021 12:30 AM IST (Updated: 17 May 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நேற்று 2-வது நாளாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நேற்று 2-வது நாளாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரணம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்கும் வகையில் தேதி வாரியாக வருவதற்கான டோக்கன் கடந்த 10-ந் தேதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கியது.

2-வது நாளாக...

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் பணி நடைபெற்றது.
ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் நேற்றைய தேதிக்கு வருமாறு டோக்கன் வழங்கப்பட்டவர்கள் தங்களது ஸ்மார்ட் கார்டு மற்றும் டோக்கன் ஆகியவற்றுடன் ரேஷன் கடைகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் நீண்ட வரிசயைில் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. நேற்று கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Next Story