கீழ்பென்னாத்தூர் அருகே கத்தியால் குத்தப்பட்ட கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு


கீழ்பென்னாத்தூர் அருகே கத்தியால் குத்தப்பட்ட கல்லூரி மாணவர்  சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 17 May 2021 12:31 AM IST (Updated: 17 May 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் அருகே கத்தியால் குத்தப்பட்ட கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கீழ்பென்னாத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் காசிநகரை சேர்ந்தவர் அஸ்வின்குமார் (வயது 19). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவர் கல்லூரி மாணவரின் அத்தை மகன் ஆவார். 

கடந்த 1-ந்  தேதி இரவு செந்தாமரைக்கண்ணன், கல்லூரி மாணவர் அஸ்வின்குமாரை கீழ்பென்னாத்தூருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அஸ்வின்குமார் வரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தாமரைக்கண்ணன், கத்தியால் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர் அஸ்வின்குமார், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தாமரைக் கண்ணனை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story