வேலூர் மத்திய ஜெயிலில் காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு
வேலூர் மத்திய ஜெயிலில் காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பாரதியார் நகரை சேர்ந்த மாபாஷா (வயது 23) என்பவர் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஜெயில் வளாக கண்காணிப்பு பணியில் காவலர் உமையன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற கைதி மாபாஷாவை நிறுத்தி காவலர் விசாரித்தார். அதற்கு அவர் கோபுர பகுதிக்கு செல்வதாக தெரிவித்தார். அங்கு செல்ல அனுமதி கிடையாது. அறைக்கு செல்லும்படி காவலர், கைதி மாபாஷாவிடம் கூறினார். அதனை ஏற்காத கைதி தொடர்ந்து காவலரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் கைதியை கோபுர பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
அதனால் ஆத்திரம் அடைந்த மாபாஷா திடீரென காவலர் உமையனை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயிலர் மோகன்குமார் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story