கோவையில் ஒரே நாளில் 3166 பேருக்கு தொற்று


கோவையில் ஒரே நாளில் 3,166 பேருக்கு தொற்று
x
கோவையில் ஒரே நாளில் 3,166 பேருக்கு தொற்று
தினத்தந்தி 17 May 2021 12:59 AM IST (Updated: 17 May 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஒரே நாளில் 3166 பேருக்கு தொற்று

கோவை

கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்த நிலையில் சுகாதார துறை வெளியிட்டபட்டியல் படி நேற்று கோவையில் புதிதாக 3,166 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,151 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். 

கோவையில் இதுவரை 92 ஆயிரத்து 479 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 22 ஆயிரத்து 181 பேர் சிகிச்சைப் 

கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், 3 ஆண்கள், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள், 7 ஆண்கள் என 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

 இதனால் கோவையில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 391 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் 10 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

Next Story