ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு “சீல்”


ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு “சீல்”
x
தினத்தந்தி 17 May 2021 1:18 AM IST (Updated: 17 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்ேகாட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

அருப்புக்கோட்டை, 
கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த நிலையில் அருப்புக்கோட்டை நாடார் சிவன் கோவில் அருகே விதிகளை மீறி திறந்த பலசரக்கு கடை மற்றும் திருச்சுழி ரோட்டில் கொரோனா விதிமுைறகளை பின்பற்றாத நாட்டு மருந்து கடைக்கு வருவாய் துறையினர் “சீல்” வைத்தனர்.
 விதிமீறலில் ஈடுபட்ட கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்கான நேற்று இரவு காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விதிமுறைகளை பின்பற்றாமல் உணவகம் நடத்தி வருவதாக அருப்புக்கோட்டை போலீசாருக்கும், தாசில்தாருக்கும் தகவல் கிடைத்தது. 
இதனடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், தாலுகா இன்ஸ்பெக்டர் கண்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது விதிமுறைகளை மீறிய  உணவகத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story