முழு ஊரடங்கால் வெறிச்சோடிய வீதிகள்
முழு ஊரடங்கால் அரியலூரில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அரியலூர்:
உணவு கிடைக்காமல் அவதி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அரியலூரில் மருந்து, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. நகரமே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.
வழக்கமாக சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் இளநீர், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு வியாபாரமும் நடைபெறவில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள், தங்கும் விடுதிகளில் தங்கி இருந்தவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
வெறிச்சோடின
நகரை சுற்றிலும் உள்ள முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் மழை தூறல் விழ தொடங்கியதால் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில மருந்து கடைகளும் மூடப்பட்டு, நகரமே அமைதியாக இருந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story