கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 17 May 2021 1:20 AM IST (Updated: 17 May 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியலூர்:

227 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சி பகுதியில் 44 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 15 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 30 பேரும், திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றிய பகுதிகளில் தலா 19 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 20 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 22 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 55 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் 3 பேரும் என மொத்தம் 227 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,581 ஆக உயர்ந்துள்ளது. இதில் 61 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
முதியவர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,104 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,415 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story