இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம், மேலக்குடியிருப்பு, வடக்குத்தெரு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கான நேற்று கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஊழியர்களுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செங்குந்தபுரம், மேலக்குடியிருப்பு, குஞ்சிதபாதபுரம், வடக்குத்தெரு, ஜூப்ளி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி கடைகள், மீன் கடைகள் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றதை கண்டறிந்தார். இதையடுத்து அக்கடையின் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.15,200 அபராதம் விதித்தார். மேலும் அங்கு சமூக இடைவெளியின்றி இருந்த பொதுமக்களுக்கும் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இறைச்சிக் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்த நகராட்சி ஊழியர்கள், இதேபோன்று மீண்டும் ஊரடங்கு விதிகளை மீறினால் ஊரடங்கு முடியும் வரை, இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story