கிருமி நாசினி தெளிக்கும் பணி


கிருமி நாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 17 May 2021 1:25 AM IST (Updated: 17 May 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புகோட்டை ஊராட்சி ஒன்றியம் பந்தல்குடி ஊராட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பந்தல்குடி ஊராட்சி சார்பில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் பந்தல்குடி ஊராட்சி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. 
இந்தப் பணியை ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி பத்திரிநாத் தொடங்கி வைத்தார். பந்தல்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி, மெயின் பஜார் உள்ளிட்ட 12 வார்டுகளில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி, மண்டல துணை வட்டாட்சியர் துரைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.  

Next Story