கடையநல்லூரில் 4 இடங்களில் சோதனை சாவடி அமைப்பு


கடையநல்லூரில் 4 இடங்களில் சோதனை சாவடி அமைப்பு
x
தினத்தந்தி 17 May 2021 1:33 AM IST (Updated: 17 May 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடையநல்லூரில் 4 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

அச்சன்புதூர், மே:
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடையநல்லூர் நகர் முழுவதும் 4 இடங்களில் நேற்று முதல் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். கடையநல்லூர் பிரதான நுழைவாயிலான மங்களாபுரம், கிருஷ்ணாபுரம், தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களிலும், மாவடிக்கால் சேர்ந்தமரம் சாலை, மேலக்கடையநல்லூர் அச்சன்புதூர் சாலையிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் கண்காணித்து பெயர், முகவரிகளை பதிவேடுகளில் பதிவு செய்து அனுப்பிவைத்தனர். தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story