சேலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சேலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே காந்தாரி மீனாட்சி மாரியம்மன், வனபத்ர காளியம்மன், குபேர விநாயகர் கோவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவால் தற்போது கோவில் மூடப்பட்டு உள்ளது.
ஆள்நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் முன்புற கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று காலை கோவில் வழியாக சென்ற பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story