தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2021 1:53 AM IST (Updated: 17 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள்.

தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 456 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 16 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 13 ஆயிரத்து 414 பேர் குணமடைந்து உள்ளனர். 2 ஆயிரத்து 761 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது, 63 வயது, 75 வயது மூதாட்டிகள் மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 38 வயது ஆண் ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

Next Story