வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின


வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 May 2021 2:01 AM IST (Updated: 17 May 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் வேலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மருந்து கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்களின் வாகனங்கள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மருந்துக்கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்க் வழக்கம்போல் இயங்கின. அம்மா உணவகங்கள், ஒட்டல்கள் நேரக்கட்டுப்பாடுடன் செயல்பட்டன. 

உணவுப்பொருட்கள் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை மூடும்படி போலீசார் அறிவுறுத்தினர். தடையை மீறி திறக்கப்பட்ட மளிகை, இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சாலைகளில் சென்றதை காணமுடிந்தது. சாலையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வீட்டிற்கு உடனடியாக செல்லும்படி எச்சரித்தனர்.

வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஆரணி சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை மற்றும் கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை சந்திப்பு, நேஷனல் சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story