ஊரடங்கை மீறியதாக 2,864 வாகனங்கள் பறிமுதல் 1,268 வழக்குகள் பதிவு


ஊரடங்கை மீறியதாக 2,864 வாகனங்கள் பறிமுதல் 1,268 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 17 May 2021 3:15 AM IST (Updated: 17 May 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை செயல்படுத்தி உள்ளது.

சென்னை, 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை செயல்படுத்தி உள்ளது. ஆனால் முழு ஊரடங்கை பொதுமக்களில் பலர் கண்டுகொள்ளவில்லை. வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றி வந்தனர்.

இதனால் கடந்த 13-ந் தேதி முதல் முழு ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் தினமும் முழு ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி சென்னையில் கடந்த 15-ந் தேதி அன்று வாகனங்களில் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2,864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,268 பேர் மீது வழக்கு போடப்பட்டது. விதிமுறைகளை கடைபிடிக்காத 55 கடைகள் மீது வழக்கு போடப்பட்டது. முககவசம் அணியாமல் வெளியில் சுற்றிய குற்றத்திற்காக 2,485 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடும் நடவடிக்கைக் தொடரும் என்று சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.

Next Story