தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 24பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட 340 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 610 மதுபாட்டில்கள், 8 லிட்டர் கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story