காயல்பட்டினத்தில் பெண் பயிற்சி டாக்டர் மாயம்
காயல்பட்டினத்தில் பெண் பயிற்சி டாக்டர் மாயமானார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் பெண் பயிற்சி டாக்டர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர்
காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ஹமிது கில்மி. இவர் காயல்பட்டினத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவயது மனைவி யுசுரா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
திருமணத்திற்கு பிறகு யுசுரா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு படிப்பு முடிந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்தார்.
மாயம்
அதிலும் ஆறு மாதங்கள் பயிற்சி முடிந்த பின்பு பயிற்சி டாக்டர்கள் அனைவருக்கும் வழியனுப்பு விழா நடந்து. இந்த விழா முடிந்த அடுத்த நாளான, கடந்த 28-ந் தேதி சான்றிதழ் பெற்று வருவதாக கூறிவிட்டு யுசுரா தூத்துக்குடி சென்றுள்ளார். இரவு அதிக நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராத நிலையில் இரவு 9 மணிக்கு கணவருடைய ஈ.மெயில் முகவரிக்கு யுசுரா அனுப்பிய தகவலில், தங்களுடன் திருமண வாழ்க்கையை தொடர விருப்பம் இல்லை. என்னை தேட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அன்று முதல் யுசுரா வீட்டிற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதை தொடர்ந்து தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஹமிது கில்மி புகார் செய்துள்ளார். அதன் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் பயிற்சி டாக்டர் மாயமான சம்பவம் காயல்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story