வேலூர் மாவட்டத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பரிசோதனை முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக மருத்துவ குழுவினர் சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று சத்துவாச்சாரி, சாவடி தெரு உள்ளிட்ட தெருக்களில் மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்துவதற்கு முன்பு ஒருநாளைக்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்காரணமாக 600 பேருக்கு மேல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
நேற்று வெளியான முடிவில் மாவட்டம் முழுவதும் 234 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்தது. அவர்களில் தீவிர பாதிப்படைந்தவர்கள், மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
Related Tags :
Next Story