ஆழ்வார்திருநகரியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
ஆழ்வார்திருநகரியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மனைவி பொன் இசக்கி (வயது 30). இவரது தம்பி இசக்கி பாண்டி. கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த அங்கப்பன் என்பவரது மகன்கள் சின்னதுரை மற்றும் மாரியப்பன் ஆகியோருடன் இணைந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கி பாண்டி வேலைக்கு செல்லாமல் இருந்ததை அவரது மனைவியிடம் சின்னத்துரையும் மாரியப்பனும் தெரிவித்துள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இசக்கி பாண்டி மற்றும் பொன் இசக்கி இருவரும் சின்னத்துரை, மாரியப்பன் ஆகியோரை கண்டித்தனர்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை மற்றும் மாரியப்பன் ஆகியோர் அருகில் இருந்த அரிவாளால் இசக்கி பாண்டி தலையில் வெட்டி உள்ளனர். பொன் இசக்கி யையும் கொலை செய்வதாக மிரட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த இசக்கி பாண்டி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பொன் இசக்கி கொடுத்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சின்னத்துரை மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story