ஊரடங்கு கால பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவி பெற மின்னஞ்சல் முகவரி


ஊரடங்கு கால பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவி பெற மின்னஞ்சல் முகவரி
x
தினத்தந்தி 21 May 2021 9:53 AM IST (Updated: 21 May 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் பேரில் ஊரடங்கு காலத்தில் ஏற்படுகின்ற குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், முதியோர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் இலவசமாக உடனடியாக சட்ட உதவி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் பெயர், பாலினம், வயது மற்றும் முகவரி விவரங்களை குறிப்பிட்டு தங்களது குறைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை dlsatiruvallur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது 9840760 576 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவித்தால் தங்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வக்கீல்கள் உடனடியாக தொடர்பு கொண்டு இலவசமாக சட்ட உதவி வழங்குவார்கள்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இலவச சட்ட உதவியை பெற்று பயன்பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story