கம்பத்தில் உழவர் சந்தை வியாபாரிகளுக்கு மூலிகை தேநீர் போலீசார் வழங்கினர்


கம்பத்தில் உழவர் சந்தை வியாபாரிகளுக்கு மூலிகை தேநீர் போலீசார் வழங்கினர்
x
தினத்தந்தி 21 May 2021 2:57 PM IST (Updated: 21 May 2021 2:57 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் உழவர் சந்தை வியாபாரிகளுக்கு போலீசார் மூலிகை தேநீர் வழங்கினர்.


கம்பம்:
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், ஆதரவற்றோர்களுக்கு கபசுர குடிநீர், மூலிகை தேநீர் வழங்க உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று கம்பம் உழவர்சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு மூலிகை தேநீர் வழங்கினார். பின்னர் வியாபாரிகள் 2 முககவசம் அணியவேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.



Next Story