ஆறுமுகநேரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


ஆறுமுகநேரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 May 2021 4:28 PM IST (Updated: 21 May 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பெருமாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பாலு மனைவி ராமு (வயது 80). பாலு ஏற்கனவே இறந்துவிட்டார்.  இவர்களுக்கு 2 மகன்கள். 2 பேரும் வெளியூர்களில் உள்ளனர். அவரது பேரன் பால்ராஜ் பாட்டியுடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட ராமு மனவேதனையில், தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story