தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 783 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 783 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் முக கவசம் அணியாத 783 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. 1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொரோனா 2-வது அலை
கொரோனா தொற்று பரவல் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பொதுஇடங்களில் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் பலர் இதை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 313 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 51பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 59 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 57 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 68 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 130 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 61 பேர் மீதும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 44 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து56 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
சமூகஇடைவெளி கடைப்பிடிக்காத...
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 9 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.9 ஆயிரத்து500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story