கொரோனா சிகிச்சை மையங்களுக்கு இலவசமாக பால் வழங்கிய விவசாயி


கொரோனா சிகிச்சை மையங்களுக்கு இலவசமாக பால் வழங்கிய விவசாயி
x
தினத்தந்தி 21 May 2021 5:43 PM IST (Updated: 21 May 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

டீக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டதால் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு விவசாயி இலவசமாக பால் வழங்கினார்.

தேனி:
தேனி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சீனிராஜ். விவசாயி. இவர் பால் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யும் பாலை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கும், வடவீரநாயக்கன்ப்பட்டியில் உள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்துக்கும் நேற்று இலவசமாக வழங்கினார். இரு மையங்களுக்கும் தலா 40 லிட்டர் வீதம் பால் வழங்கினார். மேலும் அவர் கடந்த சில நாட்களாக தனது ஊரிலும், தேனியிலும் இலவசமாக பால் வினியோகம் செய்து வருகிறார். 
இதுகுறித்து சீனிராஜிடம் கேட்டபோது, "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டீக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதனால் பால் விற்பனை குறைந்துள்ளது. எனவே நான் உற்பத்தி செய்யும் பாலை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்து சிகிச்ைச மையங்களுக்கு இலவசமாக வழங்கினேன்" என்றார்.

Next Story