கொள்ளிடம் பகுதியில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளாக 6 கிராமங்கள் அறிவிப்பு


கொள்ளிடம் பகுதியில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளாக 6 கிராமங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 May 2021 6:20 PM IST (Updated: 21 May 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளாக 6 கிராமங்கள் அறிவிப்பு.

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின் பேரிலும், கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் பரிந்துரையின் பேரிலும், கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த நல்லவிநாயகபுரம், எருக்கூர், உமையாள்பதி, மாதிரவேளூர், அரசூர், திருமுல்லைவாசல் ஆகிய 6 கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொேரானா தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட ஆறு கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. எனவே ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சேராதபடி தூய்மைப்படுத்தவும், அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தெளித்தல், ஹைட்ரோ குளோரைடு கரைசல் தெளித்தல் என்பன உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களை 100 சதவீதம் முக கவசங்கள் அணிந்திட வலியுறுத்தி, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்திட ேவண்டும். மேலும் தடை செய்யப்பட்ட 6 கிராமங்களில் தடுப்பு சுவர் அமைத்து எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும். முழு ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி, கண்காணித்து மக்கள் சேவை ஆற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட 6 கிராமங்களில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொரோனா நோய் தடுக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story