தடுப்புச்சுவர் இடிந்து மண் சரிவு
தடுப்புச்சுவர் இடிந்து மண் சரிவு.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.
இதனால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பந்தலூரில் உப்பட்டி, குந்தலாடி, நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி, தாளூர், கரியசோலை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக குந்தலாடியில் இருந்து ஓர்கடவு செல்லும் சாலையோர தடுப்புச்சுவர் இடிந்தது. மேலும் அங்கு மண் சரிவு ஏற்பட்டு அருகில் உள்ள வீட்டின் பின்புறம் விழுந்து வருகிறது. இதனால் வீடு இடியும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார், கர்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த வீட்டில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து சீரமைப்பு பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story