குண்டடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள செத்த கோழிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குண்டடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள செத்த கோழிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 21 May 2021 8:23 PM IST (Updated: 21 May 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள செத்த கோழிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குண்டடம்
குண்டடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள செத்த கோழிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.பி. வாய்க்கால்
திருமூர்த்தி அணையில் இருந்து குடிமங்கலம் வழியாக மேட்டுக்கடை மற்றும் வெள்ளகோவில் வரை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்பட்டுவருகிறது. மேட்டுக்கடை சுற்றுவட்டர பகுதிகளில் கோழி நிறுவனங்கள் மற்றும் கோழிப்பண்ணைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செத்த கோழிகளை பி.ஏ.பி. வாய்க்காலில் மர்ம நபர்கள் கொட்டிச்செல்கின்றனர். 
செத்த கோழிகள் தண்ணீரில் மிதப்பதால் அவை அழுகி புழுக்கள் உண்டாகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீர் மாசு ஏற்பட்டு வாய்களில் குளிக்கும் சிறுவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நடவடிக்கை
 விவசாயநிலங்களுக்கு தண்ணீரை பாய்ச்சும் போது விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால். எனவே செத்த கோழிகளை வாய்க்காலில்  கொட்டிச்செல்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story