உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
உடுமலை, மே.22-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட மே-21-ந் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்அந்த நாளில் அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்புநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ.கீதா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story