சரக்கு வாகனம் மீது மொபட் மோதி வாலிபர் பலி
ஊட்டி-குன்னூர் சாலையில் சரக்கு வாகனம் மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
ஊட்டி,
ஊட்டி-குன்னூர் சாலையில் சரக்கு வாகனம் மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
மாவு மில் தொழிலாளி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் சுரேஷ் (வயது 28). இவர் ஊட்டி அப்பர் பஜாரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சுரேஷ் நேற்று மாவு மில் உரிமையாளரின் மொபட்டை எடுத்துக்கொண்டு தனது நண்பரான அசோக்குமார் என்பவருடன் ஊட்டி-குன்னூர் சாலை வழியாக எல்லநள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். மந்தாடா பகுதியை அடுத்த பேரின்பவிலாஸ் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே சண்முகம் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மீது மொபட் வேகமாக மோதியது.
சம்பவ இடத்திலேயே...
இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அசோக்குமார் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அசோக்குமாரை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
விசாரணை
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சுரேஷ் மொபட்டை அதிவேகமாக ஓட்டி வந்ததும், ஹெல்மெட்டை சரியாக அணியாததும் தெரியவந்தது.
அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு வாகனம் மீது மொபட் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம், பந்தலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story