138 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம்
138 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம்
கோவை
கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆக்சிஜன் வசதி
கோவைமாவட்டத்தில் தினசரி 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி தேவைப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் 717 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. அவை அனைத்தும் நிரம்பி உள்ளன. எ
-னவே அங்கு வரும் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க ஜீரோ டிலே வார்டுஅமைக்கப்பட்டது. அதில் உள்ள 15 படுக்கைகளும் நிரம்பி விட்டன.
நோயாளிகள் அதிகரிப்பு
கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனங்க ளால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 2 பஸ்களில் நோயாளி களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதித்து மூச்சுத்திணறலு டன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
கொரோனா சிகிச்சை மையம்
ஆக்சிஜன் வசதிக்காக நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க கோவை அரசு கலைக் கல்லூரியில் 138 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கொரானா சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அங்கு அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து விட்டது. மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story