திருப்பூரில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி விரைவாக முடிக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
திருப்பூரில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி விரைவாக முடிக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
திருப்பூர்
திருப்பூர் மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் சிமெண்டு மூலம் கால்வாய்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான கம்பி கட்டும் பணிகள் உள்பட பணிகள் நடந்து வருகிறது. ஆனால் தேர்தலுக்கு முன்பு இந்த பணிகள் பல இடங்களில் வேகமெடுத்தன. ஆனால் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டன.
குறிப்பாக நஞ்சப்பா பள்ளி சாலையில் காதர்பேட்டை பகுதிகளில் இந்த பணி நீண்ட நாளாக செய்யாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. தற்போது அந்த பகுதியில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். முழு ஊரடங்கு என்பதால் இந்த பணிகளை வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இன்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story