தேனி மாவட்டத்தில் மேலும் 7 பேர் உயிரை பறித்த கொரோனா
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர்.
தேனி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 726 ஆக உயர்ந்தது. இந்த வைரஸ் தெற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 628 பேர் குணமாகினர். 5 ஆயிரத்து 403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், மூச்சுத்திணறால் பாதிப்புடன் 597 பேருக்கு செயற்கை ஆக்சிஜன் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.யு. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 பேர் சாவு
இதனிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70, 65, 62 வயது முதியவர்கள், 50, 51 வயது ஆண்கள், 45 வயது பெண் என 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதுபோல், ஆண்டிப்பட்டியில் கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டியின் உயிரையும் கொரோனா பறித்தது.
ஒரே நாளில் 7 பேர் பலியான நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story