தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 21 ஆடுகள் செத்தன.
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 21 ஆடுகள் செத்தன.
தாராபுரம்
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 21 ஆடுகள் செத்தன. இதுபோன்று சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
21 செம்மறி ஆடுகள் செத்தன
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணம் கூட்டுபுளி தோட்டத்தை சோ்ந்தவா் இளங்கோவன் (வயது40) விவசாயி. இவா் தனது விவசாய தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட செம்மறிெச ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்குபின் ஆடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துள்ளாா்.
நேற்று காலையில் இளங்கோவன் தனது ஆடுகளை பாா்க்க பட்டிக்கு சென்றுள்ளாா். அப்போது பட்டியில் இருந்த ஆடுகள் வெறிநாய்களால் கடித்து குதறப்பட்டு செத்துக்கிடப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். பின்னா் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாாிகளுக்கு தகவல் கொடுத்துள்ளாா். அதிகாாிகள் விரைந்து வந்து பாா்வையிட்டுள்ளனா்.அப்போது பட்டியில் 21 செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளது தொியவந்தது. பின்னா் அந்த ஆடுகள் அனைத்தும் அருகில் குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தளவாய்பட்டணம் பகுதியை சோ்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இறைச்சிக்கழிவுகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதி வறட்சி மிகுந்தது. எனவே விவசாயத்தைவிட கால்நடை வளா்பின் மூலம் தான் நாங்கள் வருமானம் ஈட்டி வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே தளவாய்பட்டணம், கோவிந்தாபுரம், ரெட்டிபாளையம், கண்ணாங்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் இதுபோன்று ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி கொன்று குவிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணம் எங்கள் பகுதியில் கறிக்கோழி இறைச்சிகளை சாலை ஓரத்தில் கொட்டுவதே ஆகும். சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சிகளை சாப்பிட்டு பழகிய வெறிநாய்கள் தான் இதுபோன்ற செயல்களை செய்கின்றன.
நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
மேலும் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாாிகளுக்கு புகாா் தொிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆடுகள் இறப்பு என்பது எங்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்துவதோடு, பாா்த்து, பாா்த்து வளா்த்த ஆடுகள் செத்து கிடப்பது எங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் செத்த செம்மறி ஆடுகளுக்கு உாிய இழப்பீடு தொகை வழங்குவதோடு, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
Related Tags :
Next Story