கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நல்லூர்
சேலம் மாவட்டம் வருசலூரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). பனியன் நிறுவனத்தில் பேக்கிங் தொழில் செய்து வந்துள்ளார். இவர் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் மனைவி இந்திராணி, மகன் தினேஷ்குமார் (16), மகள் கனிஷ்கா (14) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் குடிக்குப்பழக்கத்திற்கு இருந்து விடுபட மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பதால் கடனை கொடுக்க முடியாததாலும் தனது மனைவிக்கு கண் பார்வை சரி செய்ய பணம் தேவைப்படுவதால் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தம்பி அவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. சத்தம் போட்டு பார்த்தும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது ராஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் பிணத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story